வியாழன், 14 மார்ச், 2013

7

போற்றி 
'அ'
ஓம் ஓம் அகில லோக குருவே _போற்றி

ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி 
ஓம் அணுவினுள் அணுவே போற்றி 

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி 
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி 

ஓம் அழகா போற்றி 
ஓம் அறிவே போற்றி 
ஓம் அரன் மகனே போற்றி 
     அலைகடல் விரிவே போற்றி 

ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி


ஓம் ஆதாரப் பொருளே போற்றி 
ஓம் ஆதியே அருளே போற்றி 
ஓம் ஆனைமுகத்து ஐங்கரன் தாள் போற்றி ஓம்!
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி 
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி 
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி


ஓம் உள்ளொளிர் சுடரே போற்றி 
 ஓம் ஏகநா யகனே போற்றி 

ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி



ஐம்புலன் அவிப்பாய் போற்றி 

ஐம்பூத வடிவே போற்றி 
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி 
ஓம் கருணைமா கடலே போற்றி 
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி 
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி 
ஓம் மயில் வாகனனே போற்றி 
ஓம் உமையவள் மகனே போற்றி 
ஓம் உலக நாயகனே போற்றி 
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி 
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி 
ஓம் ஓதுவார்க் கினியனே தேவா  போற்றி 
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி 
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி 
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி 
ஓம் தவநிலை முடிவே போற்றி 

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி 
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி 
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி 
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி 
ஓம் பரமெனும் பொருளே போற்றி 
ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி 
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக